தற்போது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எந்த வயதினருக்கும் பக்கவாதம் ஏற்படலாம் என்றாலும், வயதானவர்களையே அது அதிகம் தாக்குகிறது. பக்கவாதத்திற்கு உங்கள் குடும்ப வரலாறுடனும் தொடர்பு உள்ளது. அதனால், உங்கள் குடும்ப வரலாற்றை மாற்றவும் முடியாது, வயதாவதை தடுக்கவும் முடியாது. எனவே பக்கவாதத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள, மற்ற வழிகளையே கடைபிடிக்க வேண்டும். நீங்கள் சில விஷயங்களை கடைபிடிப்பதுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டீர்கள் என்றால், உங்களை பக்கவாதம் தாக்குவதில் இருந்து விடுபடலாம்.
இங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நீங்கள் கடைபிடித்தாலே பக்கவாதத்தில் இருந்து விடுபடலாம்.
1. எடையை குறையுங்கள்
சராசரியான எடையில் இருப்பவர்களைவிட, உடல் பருமன் கொண்டவர்களை தாக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. நீங்கள் அதிக உடல் எடையுடனோ அல்லது உங்கள் பிஎம்ஐ எனப்படும் உடல் நிலை குறியீட்டு அளவு 25ஐவிட கூடுதலாக இருந்தாலோ, நீங்கள் அதை சராசரி நிலைக்கு கொண்டுவருவது குறித்து சிந்திக்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது உணவு கட்டுப்பாடு மூலமோ நீங்கள் எடையை குறைத்தே தீரவேண்டும்.
2. ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த வேண்டும்
உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. எனவே முறையான மருந்து, மாத்திரைகள் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டும். உங்கள் உடலில் 135/85 என்ற அளவு ரத்த அழுத்தை பராமரிக்க வேண்டும்.
3. உங்கள் மதுப்பழக்த்தை கட்டுப்படுத்துங்கள்
நீங்கள் தினமும் மது அருந்தும் பழக்கம் கொண்டவராக இருந்தீர்கள் என்றால், உங்கள் மதுவின் அளவை நீங்கள் குறைக்க வேண்டும். 2 முறைக்கு மேல் குடித்தீர்கள் என்றால், அது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். மது அருந்துவது பக்கவாதம் ஏற்பட முதன்மையான காரணமாக இருக்காது. ஆனால், அது ஆபத்தை அதிகரிக்கக்கூடிய காரணிகளில் ஒன்றாக நிச்சயம் இருக்கும்.
4. புகை பிடிப்பதை தவிர்த்துவிடுங்கள்
புகை பிடிப்பது உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்கட்டிகள் ஏற்பட வழிவகுக்கும். புகையில் ரத்தத்தின் அடர்த்தியை அதிகரித்து, தமனிகளில் தகடு போன்ற அமைப்பு உருவாவதற்கு காரணமாகிறது. உங்கள் புகை பழக்கத்தை குறைப்பது அல்லது கைவிடுவது பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவும்.
5. உங்கள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சையளியுங்கள்
மற்றவர்களைவிட, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால், உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால், அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்த விதமான நரம்பு தொடர்பான பிரச்னைகள் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களுக்கும் தஞ்சாவூர் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையை அணுகவும். இந்த ஆரோக்கியம் அளிக்கும் மையம், அதன் நரம்பு சிகிச்சைக்கு புகழ்பெற்றது. இம்மருத்துவமனை பல்வேறு சிகிச்சை திட்டங்களை வழங்குவதுடன், நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு, நோயாளிகளுக்கு தேவையான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறது.
மேலதிக தகவல்களுக்கு 04362-226297 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது info.vanchilingamhospital@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரியில் மின்அஞ்சல் மூலமோ தொடர்புகொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களை பெறுவதற்கு https://drvanchilingamhospital.com/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
முன்பதிவிற்கு https://www.drvanchilingamhospital.com/book-an-appointment என்ற இணைய முகவரியை தொடர்புகொள்ளவும்.