banner
Ask Doctor Book An Appointment
24x7 service

Ambulance Service, Stroke Care, Emergency Care, Operation Facility, Pharmacy, ICU

மூளைக்கு இடையே ஏற்படும் ரத்தக்கசிவு குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?


Date :23-Jun-2020

மூளைக்கு இடையே ஏற்படும் ரத்தக்கசிவு என்பது ஒரு வகையான பக்கவாதமாகும். அதில் உங்கள் மூளை திசுக்களில் ரத்தம் திடீரென வெடித்து, மூளையில் சேதத்தை ஏற்படுத்துகிறது. அப்போது மூளையில் ஓர் அழுத்தம் ஏற்படுகிறது, மூளைக்கு செல்லும் ஆக்சிஜனுக்கு இடையூறு விளைவிக்கும். இது மூளை மற்றும் அதன் நரம்புகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக இந்த நிலையால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக காப்பாற்றிவிடலாம். ஆனால் வயது அதிகரிக்க அதிகரிக்க ஆபத்தும் அதிகமாக இருக்கும். வயதாகும்போது, மற்ற நோய்களைப்போலவே உங்களுக்கு இந்த நோயின் தீவிரம் அதிகரிக்கும். இந்த ரத்தக்கசிவிற்கும் தொழில்நுட்பம் சிகிச்சைகளை வழங்குகிறது. மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு ஆபத்தான ஒன்றுதான், எனவே எவ்வளவு விரைந்து சிகிச்சை செய்கிறோமோ, அவ்வளவு நல்லது.

மூளைக்கு இடையே ஏற்படும் ரத்தக்கசிவுக்கு காரணம் என்ன?

மூளைக்கு இடையே ஏற்படும் ரத்தக்கசிவிற்கு பொதுவான காரணம் உயர் ரத்த அழுத்தமாகும்.
இளம் வயதினருக்கு மூளையில் ரத்தக்குழாய்களின் இயல்பில்லாத ஒருங்கிணைப்பும் காரணமாகும்.

  • ரத்த மெலிவூட்டிகளின் பயன்பாடு
  • தலையில் காயம்
  • போதைப்பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதும் ஒரு காரணமாகும். கொகைன் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படும்போது, அது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கிறது. இது மூளை இடையே ரத்தக்கசிவு ஏற்பட காரணமாகும்.
  • ரத்த சோகை போன்ற ரத்தப்போக்கு கோளாறும், இந்த ரத்தக்கசிவு ஏற்பட காரணமாகும்.

அறிகுறிகள் என்ன?

  • உங்கள் உடலின் ஒரு பகுதி திடீரென முடங்கிவிடும்
  • கடுமையான தலைவலி
    இரு கண்களிலோ அல்லது ஒரு கண்ணில் பார்வை குறைபாடு போன்ற பிரச்னைகளை
  • நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
    படிக்க, எழுதுவதில், பேசுவதில் அல்லது புரிந்தகொள்வதில் பல்வேறு பிரச்னைகளை
  • நீங்கள் சந்திக்கலாம்.
    நினைவிழப்பு, சோர்வு, தூக்கம், வாந்தி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் இதனுடன் தொடர்புள்ளவை.

நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

பொதுவாக ரத்தக்கசிவுடன் தொடர்புடைய அறிகுறிகளை பார்த்து சில நரம்பியல் சோதனைகளை மருத்துவர் மேற்கொள்வார். படம் எடுத்துப்பார்த்து ரத்தக்கசிவு பக்கவாதத்தால் அவதிப்படுகிறீர்களா அல்லது இஸ்கிமிக் பக்கவாதத்தால் அவதியுறுகிறீர்களா என்பதை மருத்துவர் கண்டறிவார். அடுத்தபடியாக, சிடி ஸ்கேன் தேவைப்படும். அது மூளையை படம்பிடித்துக்காட்டும். அது ரத்தப்போக்கை கண்டறிய உதவும் அல்லது தலையில் அதிர்ச்சி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பதை சோதிக்க உதவும். எம்ஆர்ஐ ஸ்கேனும் ரத்தப்போக்கை கண்டறிவதற்கு உதவும். அதுவும் செய்யப்படும். தமனிகளுக்குள் ரத்தத்தின் ஓட்டத்தை தெளிவாக காட்டுவதற்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படும் மற்றும் அது ரத்தக்குழாயில் உள்ள சிக்கல்களை கண்டறிய உதவும். ரத்தம் உறைந்து கட்டியாதல், நோய் எதிர்ப்புத்தன்மை மற்றும் வீக்கம் போன்றவை குறித்த பிரச்னைகளை ரத்தப்பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

மூளைக்கு இடையே ஏற்படும் ரத்தக்கசிவு கடுமையான பிரச்னைதான் என்றாலும், மருத்துவதுறையில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சி அதனை சரிசெய்ய நிச்சயம் உதவும். உங்களுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மேற்கூறிய அறிகுறிகள் தோன்றியுள்ளதா? எனில் இங்கு வந்து மூளை பக்கவாதத்திற்கு தமிழ்நாட்டிலே சிறப்பான சிகிச்சையை பெறுங்கள். இந்தியாவிலேயே மூளையில் ரத்தகசிவு ஏற்படுவதற்கு டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனைக்கு வாருங்கள். அனுபவமும், நிபுணத்துவமும் பெற்ற மருத்துவர்கள் குழுவினர் டாக்டர் வாஞ்சிலிங்கம் தலைமையில் மற்றும் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் அவர்களுடன் சிறப்பான சிகிச்சையை அளித்து, நோயாளிகளை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வருகிறோம்.

 

Blog Reviewed by: Dr. S. Vanchilingam
Mail Us: info.vanchilingamhospital@gmail.com

Ask Doctor

Our Testimonials

Subscribe Our Newsletter

Book Appointment